கஞ்சா குடிக்கி ‘ஹைனாஸ்’ வீதியில் இறங்கி அட்டூழியம்.. பிதுக்கி எடுத்த போலீசார்..! ண்ணோவ்.. வலிக்குதுண்ணா..!
சென்னை ஜெ.ஜெ நகரில் கஞ்சா போதையில் வீதியில் இறங்கி அட்டகாசம் செய்த 3 இளைஞர்கள் 10 க்கும் மேற்பட்ட கார்களின் கண்ணாடிகளை உடைத்தும், 25க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களை கீழே இழுத்து போட்டும் சேதப்படுத்தியதோடு, தடுத்தவர்களை மூர்க்கத்தனமாக தாக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
கஞ்சா போதையில்... போகிற போக்கில் வாகனங்களை சேதப்படுத்திக் கொண்டே சென்ற கஞ்சா குடிக்கி ஹைனாஸ்
இவர்கள் தான்..!
போதை மனிதனை மிருகமாக்கும் என்பதை மெய்ப்பிக்கும் வகையில், சென்னை ஜெ ஜெ நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாடி புதுநகர் பகுதியில் மூன்று இளைஞர்கள் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்களை அடித்து உடைத்தும், கண்ணில் தென்படுவோரை எல்லாம் தாக்கியபடியும் சென்றனர்
25க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களையும், 10 மேற்பட்ட கார்களையும் அடித்து சூறையாடினர்.
இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து அந்த மூன்று பேரையும் பிடித்து அடி கும்மி எடுத்தனர்.
தப்பி ஓட முயன்ற 3 பேரின் சட்டையையும் கழற்றி பின்புறம் கையைக் கட்டி தர்மஅடி கொடுத்து சாலையில் படுக்கவைத்து விட்டு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த ஜெஜெ நகர் போலீசார் மிதமிஞ்சிய போதையில் இருந்த 3 இளைஞர்கள் குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
விசாரணையில் இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் முகப்பேர் மேற்கு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன், அஜய் மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. விழுந்த அடியால் எழுந்து நடக்க இயலாமல் கூப்பாடு போட்ட 3 பேரையும் பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
சிகிச்சைக்கு பின்னர் அவர்களிடம், கஞ்சா எங்கிருந்து வந்தது, இதற்கு பின்னணியில் செயல்படுவோர் யார்? என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் கஞ்சா விற்பனையாளர்களை போலீசார் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கத்தவறினால் சமூக அமைதிக்கு கஞ்சா குடிக்கிகள் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறிவிடுவர் என்பதே கசப்பான உண்மை..!
Comments