லீவிஸ்டன் நகரில் 18 பேர் உயிரிழக்க காரணமான சம்பவத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் சடலமாக மீட்பு

0 967

அமெரிக்காவின் மெய்னி மாகாணம் லீவிஸ்டன் நகரில், பார், வணிக வளாகம் உள்ளிட்ட இடங்களில் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தி 18 பேரை கொன்ற ராபர்ட் கார்ட் என்ற நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

புதன்கிழமை இரவு துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பி ஓடிய ராபர்ட் கார்ட்டின் புகைப்படம் மற்றும் அவர் ஓட்டிவந்த காரின் புகைப்படத்தையும் வெளியிட்டு தேடிவந்த போலீசார், லிஸ்பன் நீர்வீழ்ச்சி அருகே துப்பாக்கி குண்டு காயங்களுடன் உடலை கண்டுபிடித்தனர்.

மருத்துவ பரிசோதனையில், ராபர்ட் கார்ட் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிரிழந்தது தெரியவந்துள்ளதாக மெய்னி மாகாண கவர்னர் கூறினார்.

உள்ளூர் நேரப்படி வெள்ளி இரவு 7.45 மணிக்கு உடல் கண்டெடுக்கப்பட்டதாகவும், உடனடியாக அதிபர் ஜோ பைடனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்காவின் மெய்னி மாகாணம் லீவிஸ்டன் நகரில், பார், வணிக வளாகம் உள்ளிட்ட இடங்களில் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தி 18 பேரை கொன்ற ராபர்ட் கார்ட் என்ற நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

புதன்கிழமை இரவு துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பி ஓடிய ராபர்ட் கார்ட்டின் புகைப்படம் மற்றும் அவர் ஓட்டிவந்த காரின் புகைப்படத்தையும் வெளியிட்டு தேடிவந்த போலீசார், லிஸ்பன் நீர்வீழ்ச்சி அருகே துப்பாக்கி குண்டு காயங்களுடன் உடலை கண்டுபிடித்தனர்.

மருத்துவ பரிசோதனையில், ராபர்ட் கார்ட் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிரிழந்தது தெரியவந்துள்ளதாக மெய்னி மாகாண கவர்னர் கூறினார். உள்ளூர் நேரப்படி வெள்ளி இரவு 7.45 மணிக்கு உடல் கண்டெடுக்கப்பட்டதாகவும், உடனடியாக அதிபர் ஜோ பைடனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments