ஜம்மு காஷ்மீரில் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்... இந்திய வீரர்கள் பதில் தாக்குதல்

0 1608

ஜம்மு காஷ்மீரில் சர்வதேச எல்லை கட்டுப்பாட்டு கோட்டை ஒட்டிய ஆர்.எஸ்.புரா செக்டாரின் அர்னியா பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச்சூட்டால், எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர் ஒருவரும், பொதுமக்கள் 4 பேரும் காயமடைந்துள்ளனர். துப்பாக்கிச்சூட்டுடன் சிறிய ரக குண்டுகளும் வீசப்பட்டதில் வீடுகள் சிலவும் பாதிப்படைந்துள்ளன. இதற்கு இந்திய எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

இதனிடையே, இரவு 8 மணியளவில் திடீர் தாக்குதல் தொடங்கியதாகவும், அச்சத்தில் மக்கள் பதுங்கு குழிகளில் மறைந்து கொண்டதாகவும் அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர். சுமார் 3 ஆண்டுகளுக்கு பின்னர் இதுபோன்ற தாக்குதல் நடப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments