இந்தியாவில் உள்ள இளைஞர்கள் ஒரு வாரத்தில் குறைந்தபட்சம் 70 மணி நேரம் பணியாற்ற வேண்டும் - இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி

0 3924

சீனா, ஜப்பான் போன்ற வேகமாக வளரும் நாடுகளுடன் போட்டியிட வேண்டும் என்றால் இந்தியாவில் உள்ள இளைஞர்கள் ஒரு வாரத்தில் குறைந்தபட்சம் 70 மணி நேரம் பணியாற்ற வேண்டும் என்று இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி அறிவுறுத்தியுள்ளார்.

பாட்காஸ்ட் ஒலிபரப்பு ஒன்றில் பேசிய நாராயண மூர்த்தி, தற்போது இந்தியாவின் பணி உற்பத்தித் திறன் மிகக் குறைவாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஜெர்மனி மற்றும் ஜப்பானைச் சேர்ந்தவர்கள், தங்கள் நாட்டின் நலனுக்காக கூடுதல் நேரம் பணியாற்றியதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், இந்தியாவில் உள்ள இளைஞர்களும் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காக கடினமாக உழைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். நாராயணமூர்த்தியின் கருத்துக்கு தொழிலதிபர்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments