ஐம்பதில் ஆசை வந்தால் ஆப்பும் சேர்ந்தே வரும்..! மாட்டிக்கிட்டாரு ஒருத்தரு..! கல்லூரி மாணவிக்கு போலீஸ் வலை

0 2897

20 வயது கல்லூரி மாணவியின் ஆசைவார்த்தையை நம்பி தனிமையை தேடிச்சென்ற 50 வயது மளிகை கடைக்காரரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கவலையை மறக்க செய்வதாக கூறியவரை கலங்கடித்த சூது கவ்வும் கொள்ளையர்கள் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு

ஆள் பாதி ஆடை பாதியாக மிரட்டல் கும்பலிடம் சிக்கி பதறும் இந்த 50 வயது ஆசாமி தான் மளிக்கடைக்காரர் கருணாகரன்..!

புதுச்சேரி வில்லியனூர் அடுத்த கூடப்பாக்கத்தை சேர்ந்தவர் கருணாகரன். 50 வயதானாலும் மீசையை மளித்துக் கொண்டு தன்னை இளைஞர் போல காட்டிக் கொண்டு கடைக்கு வரும் பெண்களிடம் காதல் மொழி பேசுவது வழக்கம் என்று கூறப்படுகின்றது.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு கருகாரணை தேடி கடைக்கு வந்த இளம் பெண் ஒருவர் தன் பெயர் வனிதா என்று அறிமுகப்படுத்திக் கொண்டு , பெற்றோர் இல்லாததால், உறவினர் வீட்டில் தங்கி கல்லூரியில் படித்து வந்ததாகவும், அவர்களும் தற்போது உதவ மறுப்பதால் தனது படிப்புக்கு உதவுமாறு கூறி உள்ளார். தனக்கு உதவினால் என்ன சொன்னாலும் கேட்கிறேன் என்று அந்த பெண் கூறியதால், கருணாகரன் அந்த பெண்ணுக்கு உதவுவதாக கூறி செல்போனில் மனம் விட்டு பேசி பழகி உள்ளார்.

சம்பவத்தன்று கவலையாக இருப்பதாக கூறிய அந்தப்பெண்ணை இருசக்கர வாகனத்தில் அழைத்துச்சென்ற கருணாகரன் அவருடன் சேர்ந்து குளிர்பானம் அருந்தி உள்ளார். பின்னர் ஆசையை தூண்டும் விதமாக பேசிய அந்தப்பெண், கருணாகரனை ஊருக்கு ஒதுக்கு புறமான இடத்றிற்கு அழைத்துச்சென்றுள்ளார். அங்கு சென்றதும் ஆள் பாதி ஆடை பாதியாக நின்ற கருணாகரனை மறைந்து நின்ற 3 இளைஞர்கள் செல்போனில் படம் பிடித்த படியே வந்து மிரட்டி உள்ளனர்.

சுற்றிவளைத்து மிரட்டியதால் தான் கையோடு எடுத்து வைத்திருந்த 40 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தையும், குகூள் பேயில் இருந்து 75 ஆயிரம் ரூபாயையும் அந்த இளைஞர்களுக்கு கொடுத்து விட்டு கருணாகரனும் அந்த பெண்ணும் தப்பி வந்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு பின்னர் உதவி கேட்டு வந்த கல்லூரி மாணவியின் செல்போன் சுவிட்ஜ் ஆப் ஆகிபோனது. தன்னிடம் பணம் பறித்தவர்களில் ஒருவன் தனக்கு ஏற்கனவே தெரிந்தவன் என்பதால அவன் மீது காவல் நிலியத்தில் புகார் அளித்துள்ளார் கருணாகரன். போலீசார் அதே பகுதியை சேர்ந்த ராமு, அருண்குமார் ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்த போது பச்சைக்கிளியை வைத்து நடத்தப்பட்ட பிளாக்மெயில் சூதாட்டம் அம்பலமானது.

மளிகை கடைக்காரர் கருணாகரன் பெண்கள் விஷயத்தில் மன்மதனாக வலம் வந்துள்ளார். அவரிடம் எப்போதும் லட்சக்கணக்கில் பணம் இருக்கும் என்பதை தெரிந்து கொண்ட அருண்குமார் தனது மனைவியின் தோழியான வனிதாவை அனுப்பி அவரை மயக்கி தனிமையான இடத்து வரவழைத்து இந்த வழிப்பறி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments