பிரதமர் மோடி அளித்த இரங்கல் கடிதத்தை பங்காரு அடிகளாரின் மனைவியிடம் வழங்கிய அண்ணாமலை, எல்.முருகன்

0 3200

பங்காரு அடிகளாரின் மறைவை ஒட்டி பிரதமர் மோடி அளித்த இரங்கல் கடிதத்தை அவரது குடும்பத்தினரிடம் வழங்குவதற்காக அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் உள்ளிட்டோர் மேல்மருவத்தூர் சென்றனர்.

பங்காரு அடிகளார் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் அஞ்சலி செலுத்திய பின் அடிகளாரின் மனைவியிடம் அண்ணாமலையும் எல்.முருகனும் ஆசி பெற்றனர்.

தொடர்ந்து பிரதமர் மோடி அளித்த இரங்கல் கடித்தத்தையும் அண்ணாமலை வாசித்துக் காட்டினார்.

முன்னதாக பங்காரு அடிகளாரின் குடும்பத்தினரை சந்தித்துவிட்டு வெளியே வந்த வி.சி.க தலைவர் திருமாவளவனும் அண்ணாமலை, எல்.முருகன் உள்ளிட்டோரும் பரஸ்பரம் சந்தித்து, கைலுக்கி உரையாடினர்.

திருமாவளவனின் உடல்நிலை குறித்து அண்ணாமலையும் எல்.முருகனும் கேட்டறிந்தனர்.

தொடர்ந்து காரில் அமர்ந்திருந்த கேசவ விநாயகத்திடம் அவரது உடல்நிலை குறித்து திருமாவளவனும் கேட்டறிந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments