ஊராட்சி மன்ற துணைத் தலைவரால் நிகழ்ந்த விபத்து... வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தவர் லாரி மோதி பலி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே அனுமதியின்றி வெட்டப்பட்ட சாலையோர மரத்தின் கிளை, லாரி மீது விழாமல் இருக்க ஓட்டுனர் திருப்பியபோது வீட்டின் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.
கல்லப்பாடி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மோகன் என்பவர் சாலையோரம் உள்ள புளிய மரத்தின் கிளையை வெட்டும்போது, அவ்வழியாக வந்த சரக்கு லாரி மீது விழாமல் இருக்க ஓட்டுனர் திருப்பியபோது வீட்டின் மீது மோதியது.
அப்போது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த இருவர் விபத்தில் படுகாயமடைந்தனர். அப்பகுதியினர் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் எழிலரசன் என்பவர் உயிரிழந்தார்.
தலைமறைவான மோகனை கைது செய்ய கோரி உறவினர்கள் சாலையில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் தமிழக - ஆந்திரா எல்லையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Comments