உறவினரை கொன்றதற்கு பழிக்கு பழியாக இளைஞரை வெட்டி படுகொலை.. தலைமறைவான கொலையாளிக்கு காவல்துறை வலைவீச்சு

0 2122

தூத்துக்குடியில் உறவினரை கொன்றதற்கு பழிக்கு பழியாக இளைஞரைத் தலையை துண்டித்து படுகொலை செய்த நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

அண்ணா நகர் சலவை கூடத்தில் அமைந்துள்ள விநாயகர் கோயில் எதிரே துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்த தலையை கைப்பற்றி போலீசார் விசாரணை செய்தபோது, இறந்தவர் TMB காலனியை சேர்ந்த மாரியப்பன் என்பது தெரியவந்தது.

கடந்த ஏப்ரல் மாதம், சலவை கூடத்தில் வைத்து தனது உறவினரான முத்து என்பவரை மாரியப்பன் கொலை செய்ததும், அதற்கு பழி தீர்க்க ஜாமீனில் வந்த மாரியப்பனை அதே சலவை கூடத்தில் வைத்து முத்துவின் உறவினர்கள் தலையை துண்டித்து படுகொலை செய்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments