சுற்றுலாவுக்கான கப்பல் இயக்குவது குறித்துச் சிங்கப்பூருடன் பேச்சு - நிதின் கட்கரி தகவல்

0 390

இந்தியாவில் சுற்றுலாவுக்கான கப்பல் இயக்குவது குறித்துச் சிங்கப்பூருடன் பேச்சு நடத்தி வருவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். டெல்லியில் தென்கிழக்காசிய நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டத்தில் மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசினார். அப்போது கடற்பயணச் சுற்றுலாவுக்காகச் சிங்கப்பூருக்கு ஒரு லட்சம் இந்தியர்கள் சென்றுவந்துள்ளதாகத் தெரிவித்தார்.

இதன்மூலம் இந்தியாவில் கடற்பயணச் சுற்றுலாவுக்குப் பெரிய அளவில் வாய்ப்புள்ளதாகவும், அதை மேம்படுத்துவதில் சிங்கப்பூர் முதன்மையான பங்காற்ற முடியும் என்றும் தெரிவித்தார். மும்பை, கோவா, கொச்சி, புதுச்சேரி, சென்னை ஆகிய துறைமுகங்களில் கடற்பயணச் சுற்றுலா வசதிகள் செய்யப்பட உள்ளதாகவும், இது தொடர்பாகச் சிங்கப்பூர் அரசுடன் பேச்சு நடத்தி வருவதாகவும் நிதின் கட்கரி தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments