எங்க அண்ணன் வருவாருடா.. வண்டிய திருப்பித் தாங்கடா... தம்பிகளுக்கு கும்மாங்குத்து..! ஆட்டோவில் ஏற மறுத்து அடம்

0 2444

விருத்தாச்சலம் கடைவீதியில் குடிபோதையில் அதிவேகத்தில் வாகனம் ஓட்டியவர்களிடம் இருந்து பைக்கை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்த நிலையில், சட்டம் ஒழுங்கு போலீசாரிடம் சென்று தங்கள் இரு சக்கரவாகனத்தை கேட்டு வம்பிழுத்த தம்பிகளால் பரபரப்பு ஏற்பட்டது.

எங்க அண்ணன் சீமான் வருவாருடா.. உங்களை ஒழிச்சிருவாருடா... என்று ஏகத்துக்கும் போலீசாரிடம் வம்பிழுத்து வாங்கிக் கட்டிக் கொண்ட குடிகார தம்பிகள் இவர்கள் தான்..!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் கடைவீதியில் குடிபோதையில் இருசக்கர வாகனத்தை முறுக்கியப்படி அங்குமிங்கும் ஓட்டி சென்ற இருவரை பாலக்கரையில் வைத்து மடக்கி பிடித்த போக்குவரத்து போலீசார் அவர்கள் ஓட்டி வந்த பைக்கை பறிமுதல் செய்தனர். நடந்தவாறே கடைவீதிக்கு வந்த இருவரும் அங்கு பணியில் இருந்த சட்டம் ஒழுங்கு காவலர்களிடம் போய் தங்கள் வாகனத்தை திரும்ப கேட்டு குறும்பு செய்தனர்

வண்டிய எடுத்துச்சென்றது டிராபிக் போலீஸ்... அவங்க வெள்ளை சட்டை போட்டிருப்பாங்க... என்றும், காக்கிச்சட்டை போட்டிருக்கும் நாங்க சட்டம் ஒழுங்கு போலீசார் என்றும் எவ்வளவோ எடுத்து கூறியும் கேட்காமல் இரு தம்பிகளும் அலப்பறையை கிளப்பினர்

போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் தங்கள் பையில் வைத்திருந்த பொருட்களை சாலையில் கொட்டி போக்குவரத்துக்கு இடையூறாக ரகளை செய்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

அண்ணன் சீமான் வந்து உங்களையெல்லாம் ஒழிச்சிடுவாருடா என பணியில் இருந்த காவலர்களை மிரட்ட தொடங்கினர்

ஒரு கட்டத்தில் போதை தம்பிகளின் கூச்சலால் பொறுமை இழந்த போலீசார் அவர்களை ஆட்டோவில் ஏற்றி காவல் நிலையம் அழைத்துச்செல்ல முயன்றனர். இழுத்த இழுப்புக்கு செல்லாமல் தம்பிகள் இருவரும் போலீசுக்கே டஃப் கொடுத்தனர்

இதனால் பொறுமை இழந்த பொதுமக்கள், காவல் துறையினருடன் சேர்ந்து இரு குடிகார தம்பிகளையும் கும்மாங்குத்து குத்தி, கும்மி எடுத்து ஆட்டோவில் தூக்கி போட்டு காவல் நிலையம் அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து போக்குவரத்து சீரானது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments