இங்கிலாந்தில் சிட்டி வங்கி ஊழியர் ஒரே நபர் 2 காஃபி, 2 சாண்ட்விச், 2 பாஸ்தாக்கள் சாப்பிட்டதாக பொய் கணக்கு தாக்கல் செய்தவர் பணிநீக்கம்

0 1033

இங்கிலாந்தில் சிட்டி வங்கி ஊழியர் ஒருவர், வெளிநாட்டு பயணத்தின் போது சாண்ட்விச் சாப்பிட்டதற்கு பொய் கணக்கு தாக்கல் செய்ததாகக்கூறி பணி நீக்கம் செய்யப்பட்டார்.

ஷாபாக்ஸ் ஃபெகேதே என்ற அந்நபர் அலுவல் பணியாக அண்மையில் நெதர்லாந்து சென்றதாக தெரிகிறது. லண்டனுக்கு திரும்பிய பின் அவர் தாக்கல் செய்த செலவு கணக்கில், அளவு குறைவாக இருந்ததால் 2 காஃபி, 2 சாண்ட்விச் மற்றும் 2 பாஸ்தாக்களை சாப்பிட்டதாக கூறி இருந்தார்.

இது பற்றி வங்கி தணிக்கையாளர்கள் விசாரித்த போது, ஷாபாக்ஸ் தமது நண்பருடன் நெதர்லாந்து சென்றிருந்ததும், அலுவலக கணக்கில் நண்பருக்கு உணவு வாங்கி தந்ததும் தெரிய வந்தது.

இதன் பேரில் ஷாபாக்ஸை சிட்டி வங்கி பணிநீக்கம் செய்தது. அதற்கு எதிராக ஷாபாக்ஸ் தாக்கல் செய்த வழக்கில், வெளிப்படைத்தன்மை இன்றி செயல்பட்ட ஊழியரை பணி நீக்கம் செய்தது சரியே என்று பிரிட்டிஷ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments