போதை ஏறிப்போச்சி.. புத்தி மாறிபோச்சி... வம்பிழுத்த இலியானா.. வழக்கு பதிந்த போலீஸ்..!

0 2837

சென்னை கொளத்தூரில் மது போதையில் இரு சக்கர வாகனம் ஓட்டி தடுமாறி விழுந்த பெண் ஒருவர் , அரசு மருத்துவமனையில் ரகளையில் ஈடுபட்ட நிலையில் , தடுக்கச்சென்ற பெண் காவலரை தாக்கியதாக அவர் மீது 6 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செந்து கைது செய்யப்பட்டார்...

போனா ரயிலு... சிக்கினா ஜெயிலு... எடுத்தா பெயிலுன்னு ஏகத்துக்கும் எகிறி குதித்து , வாயால் வம்பிழுத்ததாக போலீசாரிடம் வழக்கு வாங்கி உள்ள ரேகா என்கிற இன்ஸ்டாகிராம் இலியானா இவர் தான்..!

புழல் விநாயபுரத்தை சேர்ந்தவர் அழகு நிலையத்தில் வேலை பார்த்து வந்த ரேகா. சம்பவத்தன்று இரவு போதையில் இருசக்கர வாகனத்தை  இயக்கியதால் தவறி விழுந்த ரேகா,  காலில் ஏற்பட்ட சில்லரை காயத்துடன் பெரம்பூர் பெரியார் அரசு புறநகர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு நோயாளிகள் பலர் வரிசையில் காத்திருந்த நிலையில் தன்னால் வரிசையில் வர முடியாது என்று மருத்துவமனையில் வம்பிழுத்ததாக கூறப்படுகின்றது. தகவல் அறிந்து விரைந்து வந்து சமாதனப்படுத்திய பெண் போலீஸை தலைமுடியை பிடித்து இழுத்து சண்டையிட்டு ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது. அங்கு வந்த ரோந்து போலீசார் இலியானாவை காவல் நிலையத்துக்கு அழைத்துச்செல்ல முயன்ற நிலையில் செல்ல மறுத்து தன்னுடைய பராக்கிரமங்களை கூறி வாக்கு வாதம் செய்தார்....

இலியானா போலீசுடன் செல்ல மறுத்து அக்கம் பக்கத்தில் நின்றவர்களிடம் நியாயம் கேட்க, அவர்கள் போலீசிடம் செல்லுமாறு அறிவுறுத்தினர்...

ஒரு கட்டத்தில் தான் சட்டக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிப்பதாகவும், தனக்கு 2 குழந்தைகள் இருப்பதாகவும் கூறிய இன்ஸ்டா இலியானாவை சமரசப்படுத்தி முதல் உதவி சிகிச்சைக்கு பின்னர் அவரது வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அவரது போதைதெளிந்ததும் செவ்வாய்கிழமை காலை அவரை காவல் நிலையம் அழைத்து வந்த செம்பியம் போலீசார் , அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்......

கணவரை பிரிந்து வாழும் தனக்கு 2 குழந்தைகள் இருப்பதாகவும் அவர்கள் இருவரும் விடுதியில் தங்கி படித்து வருவதாகவும் தெரிவித்த ரேகா, மன உளைச்சலில் மது போதையில் தவறிழைத்து விட்டேன் என்று கதறி உள்ளார். இவர் மீது புழல் பகுதியில் உள்ள ஒரு கடையில் இதே போன்று பிரச்சனை செய்ததாக வழக்கு உள்ளதும் தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments