மகாராஷ்டிராவில் பயணிகள் ரயிலின் 5 பெட்டிகளில் தீ விபத்து.....
மகாராஷ்டிராவின் அகமது நகர் மாவட்டத்தில் பயணிகள் ரயிலில் அடுத்தடுத்து 5 பெட்டிகள் எரிந்து தீக்கிரையாகின.
அம்மாநிலத்தின் நியூ அஷ்தியில் இருந்து அகமது நகருக்கு அந்த ரயில் சென்றுக் கொண்டிருந்தது. நாராயண்பூர் என்ற இடத்துக்கு அருகே ரயிலின் ஒரு பெட்டியில் திடீரென தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. அடுத்தடுத்த 4 பெட்டிகளிலும் தீ மளமளவென பரவியது.
ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டதால் அதில் இருந்த பயணிகள் அவசர அவசரமாக இறங்கி உயிர் தப்பினர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
Comments