கல்லூரி மாணவியை கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற தாய்மாமன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி அருகே கல்லூரி மாணவியை கழுத்தறுத்துக் கொலை செய்துவிட்டு, விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற தாய்மாமன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
ஏற்கனவே கொலை வழக்கு ஒன்றிலிருந்து தப்பிப்பதற்காக விஷமருந்தியவரை காப்பாற்றி அடைக்கலம் கொடுத்த சொந்த சகோதரி மகளையே அவர் கொலை செய்தது தெரியவந்துள்ளது.
சின்ன கசிநாயக்கண்பட்டியைச் சேர்ந்த சரண்ராஜ் என்ற அந்த நபர், கல்லூரி படித்து வந்த தனது சகோதரி மகளை அடைய நினைத்து முடியாமல் போனதால், அவரை கொலை செய்துவிட்டு தலைமறைவானார். நேற்று விஷமருந்திய நிலையில் மீட்கப்பட்ட சரண்ராஜ், மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
Comments