டாப்பு டக்கரு.. அ.இ.த.வி.ம.இ. புஸ்ஸி ஆனந்த் பேரணிக்கு போலீசார் தடை போட்ட பின்னணி.!

0 1977

புதுக்கோட்டையில் அனுமதியின்றி இரு சக்கரவாகன பேரணி செல்ல முயன்ற விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை ரெங்கம்மா சத்திரம் பகுதியில் நடந்த லியோ பட வெளியீடு தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு வருகை தந்த அ.இ.த.வி.ம.இ அமைப்பின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை வரவேற்று அழைத்து செல்ல பைக்கில் விஜய் ரசிகர்கள் திரண்டனர்

புஸ்ஸி ஆனந்த் கையில் ஒரு இரு சக்கரவாகனத்தை கொடுத்து பேரணி நடத்த தயாராகினர்,

இதையடுத்து உஷாரான போலீசார் முன் அனுமதி பெறாத போரணியால் போக்குவரத்துக்கும் , பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படும் எனக்கூறி தடுத்தனர்.

இதனால், அ.இ.த.வி.ம.இ நிர்வாகிகளுடன் புஸ்ஸி ஆனந்த் மரத்தடியில் நிற்கும் நிலை ஏற்ப்பட்டது

பின்னர் சத்தமில்லாமல் காரில் ஏற்றி அழைத்துச்சென்று ஆலோசனை கூட்டம் நடத்தினர்

கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்திடம், லியோ டிரைலரில் விஜய் கெட்ட வார்த்தை பேசியது குறித்து கேள்வி எழுப்பியதும் இரு கையெடுத்து கும்பிட்டு சிரித்தபடியே நழுவி சென்றார்..

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments