'ஹேப்பி சன் ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி தாமதமாகத் தொடங்கியதால் மயங்கி விழுந்த சிலர்.. சுவர் ஏறி குதித்து காலில் பலத்த காயமடைந்த இளைஞர்..

தஞ்சாவூரில் ஆட்டம் பாட்டம் என 'ஹேப்பி சன் ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி களைகட்டிய நிலையில், நிகழ்ச்சி தாமதமாகத் தொடங்கியதால் சாப்பிடாமல் வந்திருந்த சிலர் மயங்கி விழுந்தனர்.
தஞ்சை நீதிமன்ற சாலையில் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த மாநகராட்சி மேயர் ராமநாதன், சிறுவர்களுடன் பாடலுக்கு நடனமாடினார்.
தொடர்ந்து ஆட்டம், பாட்டம், சிலம்பாட்டம், வாள் வீச்சு என ஹேப்பி சன் ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் உற்சாகம் கரைபுரண்டது.
பள்ளி, கல்லூரி, வீட்டு வேலை, அலுவலக வேலை என பலதரப்பட்ட வேலைப் பளுவில் மன அழுத்தத்தோடு வார நாட்களை நகர்த்தும் சிறுவர்கள், பெரியவர்களுக்கு இதுபோன்ற நிகழ்ச்சிகள் ஆறுதல் தருவதாக பெண்கள் தெரிவித்தனர்.
முன்னதாக காலை ஆறரை மணிக்கே நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். அவர்களில் உணவருந்தாமல் வந்திருந்த சிலர் மயங்கிக் கீழே விழுந்தனர்.
Comments