ஆபரேஷன் அஜய் திட்டத்தின் கீழ் இஸ்ரேலிலிருந்து தாயகம் திரும்பிய 918 இந்தியர்கள்..

0 963

ஆபரேஷன் அஜய் திட்டத்தின் கீழ் இஸ்ரேலில் இருந்து இதுவரை 918 இந்தியர்கள் தாயகம் அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலில் சுமார் 18 ஆயிரம் இந்தியர்கள் உள்ள நிலையில், அவர்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்துவர ஆபரேஷன் அஜய் என்ற திட்டத்தை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

இஸ்ரேலிலிருந்து தாயகம் திரும்ப விரும்பும் இந்தியர்கள், அதற்கு உண்டான ஆன்லைன் பயண படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்தால் முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் 274 பயணிகளுடன் இஸ்ரேலிலிருந்து 4வது மீட்பு விமானம் டெல்லி வந்தடைந்தது. மத்திய அமைச்சர் வி.கே. சிங் பயணிகளுக்கு தேசியக் கொடியைக் கொடுத்து வரவேற்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments