வீரப்பன் இருந்திருந்தால் காவிரி பிரச்சினை வந்திருக்காது: சீமான்
சந்தனக் கடத்தல் வீரப்பன் இருந்திருந்தால் காவிரி பிரச்சினை வந்திருக்குமா என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வினவியுள்ளார்.
திருப்பத்தூரில் தமது கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், சந்தனமரக் கடத்தல் வீரப்பன் மிகவும் நல்லவர் என்றும் அவர் வாய் திறந்தால் பலர் உள்ளே செல்ல வேண்டியிருக்கும் என்பதால் அவரை கொன்று விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
சிந்து நதி, பிரம்மபுத்திரா போன்றவற்றை எதிரி நாடுகளே அமைதியாக பகிர்ந்து கொள்ளும் போது, தமிழகத்தின் பல்வேறு வளங்களை பகிர்ந்து கொள்ளும் அண்மை மாநிலம் காவிரி நீர் தர மறுப்பது நியாயமா என்றும் சீமான் கேள்வி எழுப்பினார்.
Comments