அதிமுக பிரமுகர் கொலையில் தொடர்புடைய இரு ரவுடிகள் போலீஸார் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை

0 1499

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே போலீஸார் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்ப முயன்ற இரண்டு ரவுடிகள் போலீஸ் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

பாடியநல்லூரைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் பார்த்திபன் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடிகள் சதீஷ், முத்து சரவணன் இருவரும், மாரம்பேடு அருகே ஒரு பாழடைந்த கட்டடத்தில் மறைந்திருப்பதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில், உதவி ஆணையர் ஜவகர் தலைமையிலான ஆறு பேர் கொண்ட தனிப்படை போலீசார் அந்த இடத்தைச் சுற்றி வளைத்தனர்.

அப்போது, இரு தரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் ரவுடிகள் இருவரையும் போலீசார் சுட்டுக் கொன்றனர்.

ரவுடிகள் சுட்டதில் காயமடைந்த காவல்துறையினர் நெவி பிரபு, கிருஷ்ணமூர்த்தி, ராஜேஷ் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடிகள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments