ஹமாஸ் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்களின் உடல்களை வீடு வீடாகச் சென்று கைப்பற்றிய இஸ்ரேலிய படை
ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலின் கிப்புட்ஸ் நகரம் பெரும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.
காசாவில் உள்ள ஹமாஸ் போராளிகளுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே 5 நாட்களாக போர் நீடிக்கும் நிலையில், இருதரப்பிலும் சேர்த்து ஆயிரக்கணக்கில் உயிர்பலிகள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், ஹமாஸ் நடத்திய தீடீர் தாக்குதலில் இஸ்ரேலின் கிப்புட்ஸ் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது.
அங்குள்ள ஃபர் அசார் பகுதியில் நூறுக்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களை கொன்ற ஹமாஸ் போராளிகள், 10க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றதாக கூறப்படுகிறது.
அப்பகுதியில் கட்டடங்கள், வாகனங்கள் சேதமடைந்ததுடன் மனித உடல்களும் ஆங்காங்கே கிடந்தன.
அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள இஸ்ரேல் ராணுவத்தினர் வீடு வீடாக சென்று பொதுமக்களின் உடல்களை கைப்பற்றினர்.
Comments