13,500 அடி உயரத்தில் இருந்து ஸ்கை டைவிங் செய்த 104 வயது மூதாட்டி மரணம்

0 2639
13,500 அடி உயரத்தில் இருந்து ஸ்கை டைவிங் செய்த 104 வயது மூதாட்டி மரணம்

கடந்த ஒருவாரத்துக்கு முன்பாக அமெரிக்காவின் இல்லினாய்சில் 13 ஆயிரத்து 500 அடி உயரத்தில் இருந்து ஸ்கை டைவிங் செய்து சாதனை படைத்த 104 வயது பெண்மணி டோரதிஹாப்னர் காலமானார்.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு விமானத்தில் இருந்து ஸ்கை டைவிங்கில் ஈடுபட்ட பின்னர் பயம் இல்லாதவர்கள் இந்த முயற்சியில் ஈடுபடலாம் என்று டோரதி கூறினார்.

உலக சாதனை நிகழ்த்திய ஹாப்னருக்கு இன்னும் சாதனைக்கான சான்றுகள் வழங்கப்படவில்லை. ஆனால் அவர் அதற்கு முன்பாகவே மரணமடைந்து விட்டார். அவரது மரண செய்தியை உள்ளூர் ஊடகங்களும்,டைவிங் சங்கங்களும் உறுதி செய்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments