இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போரில் காசா மருத்துவமனையில் கணவர் உடலை பார்த்து செவிலியர் கதறல்

0 1166

இஸ்ரேல் தாக்குதலில் காயமடைந்த பலருக்கு காசா நகர மருத்துவமனையில் முதலுதவி அளித்து வந்த செவிலியர் ஒருவர், சவக்கிடங்கில் வைப்பதற்காக கொண்டுவரப்பட்ட உடல்களில் தனது கணவரின் உடலும் இருந்ததைக் கண்டு கதறி அழுதார்.

எதிர்பாராத அதிர்ச்சியில் இருந்து மீள முடியாத அவர், மருத்துவமனைக்கு வெளியே நீண்ட தூரம் கதறியபடி ஓடினார்.

இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலில் காஸாவில் நொறுங்கிய கட்டிடங்களில் உயிருக்கு போராடியவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் வாகனங்களில் இடைவிடாமல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றனர்.

உயிரிழந்த பாலஸ்தீனர்களின் உடல்களை அடக்கம் செய்ய கல்லறைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. உறவுகளை இழந்தவர்கள் கதறி அழுதபடி கல்லறைகளை நோக்கி கூட்டம் கூட்டமாக சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments