ஹமாஸ் போராளிகள் மீதான தாக்குதலை 3 லட்சம் வீரர்களைத் திரட்டி தீவிரப்படுத்திய இஸ்ரேல் ராணுவம்

காஸா பகுதியில் பாலஸ்தீன ஹமாஸ் போராளிகள் மீதான தனது தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.
இதற்காக, கடந்த 48 மணி நேரத்தில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்களைத் திரட்டியுள்ளதாக இஸ்ரேல் ராணுவ அதிகாரி டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் 4500 ராக்கெட் தாக்குதல்களைத் தொடுத்ததாகவும், பதிலுக்கு ஹமாஸின் 1200-க்கும் மேற்பட்ட இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் இதுவரை 900 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 2500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
காஸாவில் 30 பேரை ஹமாஸ் போராளிகள் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இஸ்ரேலுடன் நீண்ட போருக்குத் தயாராக உள்ளதாக ஹமாஸ் போராளிகள் அறிவித்துள்ளனர்.
Comments