கர்நாடகாவில் கோயிலுக்குச் சென்று விட்டு திரும்பிய போது கார் மீது 2 லாரிகள் அடுத்தடுத்து மோதியதில் 7 பேர் பலி 8 பேர் பலத்த காயம்

கர்நாடகாவின் விஜயநகர் பகுதியில் கார் மீது 2 லாரிகள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலியான நிலையில், 8 பேர் பலத்த காயமடைந்தனர்.
ஒசப்பேட்டையைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் கோயிலுக்குச் சென்று விட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, எதிர்திசையில் வந்த லாரியின் ஸ்டீரியங் முறிந்து கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பை உடைத்துக் கொண்டு காரின் மீது மோதியது.
அதே நேரத்தில் காருக்கு பின்னால் வந்த மற்றொரு லாரியும் கட்டுப்பாட்டை இழந்து காரில் மோதியதில், இடிபாடுகளுக்கு இடையே சிக்கி காரில் பயணித்த 13 பேரில் நான்கு வயது சிறுவன் உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இரண்டு லாரிகளின் ஓட்டுநர்கள் உள்பட 8 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
Comments