12ஆம் வகுப்பு சான்றிதழை போலியாக கொடுத்து 24ஆண்டுகள் அரசு பள்ளி ஆசிரியராக பணி புரிந்த பெண் மீது வழக்குப்பதிவு

12ஆம் வகுப்பு சான்றிதழை போலியாக கொடுத்து 24ஆண்டுகள் அரசு பள்ளி ஆசிரியராக பணி புரிந்த பெண் மீது வழக்குப்பதிவு
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 12ஆம் வகுப்பு சான்றிதழை போலியாக கொடுத்து 24 ஆண்டுகளாக அரசு பள்ளி ஆசிரியராக பணி செய்ததாக விஜயபானு என்பவர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.
ராஜேந்திராநகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு ஆரம்பப்பள்ளியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தேனி மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாக ரகசிய புகார் வந்தது. இதுதொடர்பாக வந்த புகாரின் மீது கல்வி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு போலீசில் புகார் அளித்தனர்.
Comments