சட்டப்பேரவையில் செல்லூர் ராஜூவின் கேள்விக்கு அணை தண்ணீரை தெர்மாகோலால் மூடி வைத்துள்ளோம் துரைமுருகன் பதில்

0 1311

சட்டப்பேரவையில் செல்லூர் ராஜுக்கு அமைச்சர் நேரு பதிலளிக்கும் போது குறுக்கிட்டு பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அணைகள் காலியாகாமல் இருக்க தெர்மாகோல் கொண்டு மூடி வைத்துள்ளோம் எனவே கவலைப்பட வேண்டாம் என கூறியதால் அவையில் சிரிப்பலை எழுந்தது.

கேள்விநேரத்தில், மதுரை மாநகரில் குடிநீருடன் சாக்கடை நீரும் கலந்து வரக்கூடிய நிலையில் மதுரை மாநகருக்கு சுத்தமான குடிநீர் வழங்க அரசு பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் எனவும் சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜூ கோரிக்கை வைத்தார்.

மதுரை மக்களுக்கு குடிநீர் கிடைக்க முல்லைப் பெரியாறு அணையிலிருந்து அ.தி.மு.க ஆட்சியில் வழிவகை செய்யப்பட்டதாகவும், தற்போது அந்த பணி ஆமை வேகத்தில் நடக்கிறது எனவும் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

இன்னும் 15 நாளில் 160 எம்.எல். குடிநீர் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைப்பார் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். அப்போது அமைச்சர் துரைமுருகன் குறுக்கிட்டுப் பேசிய போது அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments