நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு வரும் 10-ம் தேதி முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடக்கம்

நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு வரும் 10-ம் தேதி முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க உள்ளது.
இதற்காக 25 கோடி ரூபாய் செலவில் கொச்சினில் உருவாக்கப்பட்ட செரியபாணி சொகுசு கப்பல் நாகை துறைமுகம் வந்தடைந்தது. கப்பலுக்கு சூடம் ஏற்றி, தேங்காய் உடைத்து, மலர்கள் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது.
அடுத்த 2 நாட்களுக்கு கப்பலின் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. இக்கப்பலில் பயணம் செய்ய நபர் ஒருவருக்கு 6 ஆயிரத்து 500 ரூபாயாக டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பயணத்திற்கு பாஸ்போர்ட் மற்றும் இலங்கை விசா அவசியம் என்றும், விமான நிலையத்தில் பின்பற்றப்படும் அனைத்து நடைமுறைகளும், இந்த கப்பல் போக்குவரத்திலும் பின்பற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 ஊழியர்கள் மற்றும் 150 பயணிகளுடன் தனது முதல் பயணத்தை வரும் 10-ம் தேதி காலை 7.30 மணிக்கு தொடங்கும் கப்பல், புறப்பட்ட 3 மணி நேரத்தில் இலங்கை சென்றடையும்.
Comments