இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் போராளிகள் பிரிடேட்டர் குண்டு மழை..! கட்டிடங்கள் தரைமட்டம் 200 பேர் பலி

0 1484

இஸ்ரேல்  நாட்டிற்கும் , பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளி குழுவுக்கும் இடையே போர் மூண்டுள்ள நிலையில் ராக்கெட் மற்றும் விமான தாக்குதல்களில் இதுவரை 200 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆப்கானிஸ்தானின் தாலிபான்கள்.... நைஜீரியாவின் போகஹராம் போல பாலஸ்தீனத்தின் அடைப்படை வாத இயக்கமாக ஹரகத் அல் முகவமா அல் இஸ்லாமியா என்கிற ஹமாஸ் இயக்கம் உள்ளது. கடந்த 1987 ல் தொடங்கப்பட்ட இந்த இயக்கம் பல முறை இஸ்ரேலுடன் போர் தொடுப்பதும் பெரும் உயிர் இழப்புகள் ஏற்ப்பட்டதும் இருதரப்பும் தன்னிசையாக போரை நிறுத்திக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்துவதும் தொடர்ந்து வருகின்றது.

அந்தவகையில் இன்று பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் போராளிக்குழுக்கள் இஸ்ரேலுக்குள் புகுந்து பல இடங்களில் மீண்டும் தாக்குதலை நடத்தியது. எல்லைகளை பொக்லைன் கொண்டு உடைத்தனர்

காலையில் இருந்து 5000 ஏவுகனைகளை ஏவி இஸ்ரேலை கதிகலங்க வைத்த ஹமாஸ் போராளிகளுக்கு எதிராக போரை அறிவித்த இஸ்ரேல் விமானப்படை மூலம் காஸா பகுதியில் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றது. எல்லைப்பகுதிகளில் துப்பாக்கிச்சண்டை நடந்து வருகின்றது.

இஸ்ரேலின் இரும்பு வேலிகளை தகர்த்து உள்ளே நுழைந்த ஹமாஸ் போராளிக்களுக்கு பதில் அடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் விமானப்படை காசாவில் கடுமையான தாக்குதலை நடத்தி வருவதால திரும்பிய பக்கமெல்லாம் கட்டிடங்கள் இடிந்து புகை மண்டலமாக காட்சி அளிப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன

சுமார் 16 டன் வெடிகுண்டுகளை காசா மீது இஸ்ரேல் விமானங்கள் வீசி உள்ளதாகவும் , தொடர்ந்து பிரிடேட்டர் ட்ரோன்கள் மூலம் குண்டுக்ளை வீசி வருவதாகவும் கூறப்படுகின்றது , இந்தவகை ட்ரோன்கள் 30 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து இலங்கை நோக்கி குண்டு மழை பொழிந்து வருவதால் பாலஸ்தீனத்தில் காஸா பகுதி பற்றி எரிந்து வருகின்றது

இஸ்ரேலின் அதிரடி தாக்குதலில் ஏராளமான கட்டிடங்கள் தரைமட்டமாகி உள்ளதாகவும், 200க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும், 700க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளதாகவும், 70 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது

ஹமாஸ் போராளிகள் மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு , பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, உக்ரைன் , இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், லெபனானில் உள்ள போராளிகுழுக்களுக்கு ஹமாஸ் அழைப்பு விடுத்திருந்தது. இதனை ஏற்று ஹமாஸ் போராளி குழுக்களுக்கு ஆதரவாக களமிறங்க உள்ளதாக இஸ்லாமிக் ஜிகாத் என்ற அமைப்பு அறிவித்துள்ளது. இரு தரப்பும் மோதலை கைவிடுமாறு ரஷ்ய அதிபர் புத்தின் கேட்டுக் கொண்டுள்ளார்.

இஸ்ரேல் ராணுவ முகாம்கள் மீது ஹமாஸ் போராளிகள் பாராசூட் மூலம் தாக்குதல் நடத்துவதால்,
போரில் காயம் அடைந்தவர்களுக்கு அதிக அளவு ரத்தம் தேவைப்படுவதாகவும், மக்கள் ரத்ததானம் செய்ய முன்வருமாரு இஸ்ரேல் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கிடையே இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் வெளியே செல்வதை தவிர்குமாறும், பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.ஏற்கனவே ரஷ்யா உக்ரைன் போர் ஒரு வருடம் கடந்து நீடித்து வரும் நிலையில் , இஸ்ரேலுக்கும் பாலிஸ்தீனத்துக்கும் இடையிலான போர் சர்வதே ச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments