சிவகங்கையில் கருவேல மரங்கள் வெட்டி கடத்தப்பட்டதாகப் புகார்... வட்டாட்சியர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

0 829

சிவகங்கை மாவட்டம் பிரமனூர் கண்மாயில் கருவேல மரங்களை வெட்டி கடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

வனத்துறைக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் உள்ள கருவேல மரங்களை வெட்டி அப்புறப்படுத்த ஐயப்பன் என்பவருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்த நிலையில், அவரோ வருவாய்துறைக்குச் சொந்தமான 90 ஏக்கர் நிலத்தில் உள்ள கருவேல மரங்களையும் சேர்த்து வெட்டி விட்டதாக கூறப்படுகிறது.

அதன் மதிப்பு ஒரு கோடி ரூபாய் இருக்கும் என்றும், கிராம பொதுப்பணிகளுக்காக பயன்படுத்தப்பட வேண்டிய பணம் பறிபோய்விட்டதாகவும் கூறி விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒப்பந்தகாரரிடம் உரிய இழப்பீடு பெறப்படும் என அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments