வீட்டு வரி, சொத்து வரியை தாமதமாக செலுத்துவோருக்கு 1 சதவீதம் அபராதத் தொகையை தி.மு.க. அரசு வசூலிக்க திட்டம் என இ.பி.எஸ் குற்றசாட்டு

0 977

வீட்டு வரி, சொத்து வரியை கடுமையாக உயர்த்தியதோடு மட்டுமல்லாமல், காலதாமதமாக வரி செலுத்துவோருக்கு ஒரு சதவீத அபராதத் தொகையையும் தி.மு.க. அரசு வசூலிக்கத் துடிப்பதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நடப்பு நிதியாண்டில், முதல் மற்றும் 2ஆம் தவணைகளை, மக்கள் காலதாமதமாக செலுத்தினால் ஒரு சதவீதம் அபராதத் தொகை வசூலிக்கப்படும் என சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மேம்படும் வரை சொத்து வரி உயர்த்தப்பட மாட்டாது என தேர்தலின்போது தி.மு.க. வாக்குறுதி அளித்ததாக எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது வரியை உயர்த்தியதோடு மட்டுமின்றி, தாமதத்திற்கு அபராதமும் விதிக்கப்படுவதன்மூலம் அரசின் இரட்டை வேடத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments