அண்ணாமலை இன்றி ஆரம்பமான நிர்வாகிகள் கூட்டம்! தனித்தனி பிரஸ் மீட்..! தடலாடி பேட்டிகள்..!!

0 2524

2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வா, தி.மு.க.வா என்பது தான் போட்டியே என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னையில் நடந்த மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில், அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகியதில் தமக்கு வருத்தம் ஏதுமில்லை என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை அமைந்தகரையில் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் கூடியது பா.ஜ.க. மாவட்ட தலைவர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளின் கூட்டம். மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் காலை 10-30 மணிக்கு கூட்டம் துவங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அண்ணாமலை கூட்டத்துக்கு வர தாமதம் ஆன நிலையில், அண்ணாமலை வருவதற்கு முன்பாகவே வந்தே மாதரம் பாடி கூட்டத்தை தொடங்கினர்.

கேசவ விநாயகம், ஹெச். ராஜா, பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த நிலையில், சுமார் 11-45 மணிக்கு அண்ணாமலை கூட்ட அரங்குக்கு வந்தார்.

கூட்டத்தில் இருந்த நிர்வாகிகள் வெளியே அழைத்துவரப்பட்டு, அண்ணாமலையை வரவேற்க நிறுத்திவைக்கப்பட்டனர்.

தாமதமாக வந்த அண்ணாமலையை, வாசலில் பூங்கொத்துகளை வழங்கியும் மலர்களைத் தூவியும் பா.ஜ.க.வினர் வரவேற்றனர்.

அண்ணாமலையைக் கண்டதும், இ.பி.எஸ்.ஸுடன் கூட்டணி வேண்டாம் என்று தொண்டர்கள் சிலர் கோஷமெழுப்பினர்.

பா.ஜ.க. தொண்டர்களின் கூட்டத்தில் மிதந்தபடி அண்ணாமலை சரியாக 12 மணிக்கு மேடைக்கு வந்தடைந்தார். வந்ததும் தனது பேச்சை துவக்கியவர், கிட்டதட்ட ஒரு மணி நேரம் பேசினார். அப்போது, கூட்டணி குறித்த தமது கருத்தை தாம் ஏற்கனவே ஆழமாக கூறிவிட்டதாக தெரிவித்த அண்ணாமலை,மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக டெல்லி தேசிய தலைமை தான் முடிவெடுக்கும் என்றும் கூறினார்.

அண்ணாமலை பேசி முடித்த நிலையில், பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் எச்.ராஜா, வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பா.ஜ.க. மூத்த நிர்வாகிகள் மற்றொரு அறையில் செய்தியாளர்களை திடீரென சந்தித்தனர். ஆலோசனை கூட்டத்தில் அ.தி.மு.க.வுடனான கூட்டணி பற்றி பேசவில்லை என்று தெரிவித்த பொன் ராதாகிருஷ்ணன், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து செல்பவர்கள் செல்லட்டும் என்றார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் ஏன் அண்ணாமலை பங்கேற்கவில்லை? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, சிறிது நேரம் பேசினாலே அண்ணாமலைக்கு இருமல

பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்த செய்தியாளர் சந்திப்பு முடிந்த அடுத்த நிமிடம், கட்சி அலுவலகத்தை விட்டு வெளியே வந்த அண்ணாமலை, மாஸ்க் அணிந்தவாறு திடீர் செய்தியாளர்கள் சந்திப்பை நிகழ்த்தினார்.

2024 தேர்தலில் பா.ஜ.கவுக்கும், திமுகவுக்கும் தான் போட்டியே என்று அண்ணாமலை கூறினார்.

ஒரு ஆலோசனைக்கூட்டம், இரண்டு செய்தியாளர்கள் சந்திப்பு.. என குழப்பத்துடன் பாஜக நிர்வாகிகள் கலைந்து சென்றனர்..

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments