மயிலாடுதுறை வாணவெடி குடோனில் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழப்பு 4 பேர் காயம்

0 2781

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே வாணவெடி குடோனில் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

தில்லையாடி கிராமத்தில் மோகன் என்பவருக்கு சொந்தமான வாணவெடி தயாரிப்பு குடோனில் வெடி தயாரிக்கும் போது திடீர் விபத்தில் அங்கிருந்த வெடிகள் அனைத்தும் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது.

குடோனில் பணியாற்றிய நான்கு பேர் உடல் சிதறி பலியாகினர். அவர்களது உடல் பாகங்கள் பல மீட்டர் தூரம் வரை சிதறி கிடந்தன.

காயமடைந்த 4 பேர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தகவல் அறிந்த தரங்கம்பாடி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஸ்சிங் விபத்து நேரிட்ட இடத்தில் நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், விபத்து தொடர்பாக வெடி தயாரிப்பு நிறுவன உரிமையாளர் மோகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments