நெல்லையில் ஒருதலைக்காதலால் இளம்பெண் வெட்டிக்கொலை செய்ய பட்ட வழக்கில் சிறுவன் கைது

0 3060

நெல்லையில் ஒருதலைக்காதலால் 18 வயது இளம்பெண்ணை வெட்டிக்கொலை செய்து விட்டு பிளேடால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற 17 வயது சிறுவனை போலீஸார் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

நெல்லை டவுனில் சந்தியா என்ற இளம்பெண்ணை வெட்டிக் கொன்ற சிறுவன் முனைஞ்சிப்பட்டி கிராமத்தில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து தனிப்படை போலீஸார் அங்கு விரைந்தனர்.

அப்போது, போலீஸாரை கண்டு பயந்து ஓடிய சிறுவனை துரத்திச் சென்று பிடித்த போது அவனது கழுத்தில் பிளேடால் அறுத்துக் கொண்ட காயம் இருந்ததால் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.

பலமுறை அவளிடம் பேசி பார்த்தும் எந்த பலனும் இல்லை எனவும், அவள் இல்லாத உலகத்தில் வாழ விரும்பாததால் தன்னை தூக்கிலிடுமாறு சிறுவன் கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments