கடலூர் அருகே 12ஆம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்திக் கொன்ற பொறியாளரை போலீசார் தேடி வருகின்றனர்.

0 3352

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே 12ஆம் வகுப்பு மாணவனை பட்டப்பகலில் கத்தியால் குத்திக் கொன்ற பொறியாளரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேல் புளியங்குடியைச் சேர்ந்த அந்த மாணவர் காலை வழக்கம் போல் பள்ளி செல்வதற்காக பேருந்துக்காக காத்திருந்தார்.

அங்கு வந்த அதே ஊரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான ஆனந்த் என்பவர், தனியாக பேச வேண்டும் என்று கூறி மாணவரை ஓடைப் பக்கம் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

சிறிது நேரத்தில் மாணவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது அவர் ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவர், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் வழியில் உயிரிழந்தார்.

தன் பாலின உறவுக்கு இணங்க மறுத்ததால் மாணவரை பொறியாளர் ஆனந்த் கொலை செய்திருப்பதாகவும் அவரை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments