சீனாவில் களை கட்டிவரும் இலையுதிர் திருவிழா... பாண்டா கரடிகளை காண படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

0 878

சீனாவில் இலையுதிர் திருவிழாவை கொண்டாட 8 நாட்கள் தொடர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால், பாண்டா கரடிகளை பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் திரண்டனர்.

சிஷுவான் மாகாணத்தில் பாண்டா கரடிகளுக்கென பிரத்யேகமாக இயங்கிவரும் இனப்பெருக்க மையத்திற்கு 3 நாட்களில் ஒரு லட்சத்து 33 ஆயிரம் பேர் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பார்வையாளர்களை கவர்வதற்காக பலவகை அலங்கார ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

உலகிலேயே கூண்டில் அடைத்து பராமரிக்கப்பட்டுவரும் ஒரே ஒரு பழுப்பு நிற பாண்டாவை பார்க்க ஷாங்சி மாகாண அறிவியல் பூங்காவிற்கு பல்லாயிரக்கணக்கனோர் படையெடுத்துவருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments