குன்னூர் அருகே விபத்தில் பலியான 9 பேரின் உடல்கள் சொந்த ஊரான கடையத்திற்கு எடுத்து வரப்பட்டு கண்ணீர் மல்க அடக்கம்..!

0 1705

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே விபத்தில் பலியான 9 பேரின் உடல்கள் சொந்த ஊரான தென்காசி மாவட்டம் கடையத்திற்கு எடுத்து வரப்பட்டு கண்ணீர் மல்க அடக்கம் செய்யப்பட்டது.

தென்காசி மாவட்டம் கடையத்தை சேர்ந்த 50 க்கும் மேற்பட்டவர்கள் கடந்த வியாழன் அன்று பேருந்து மூலம் ஊட்டி, குன்னூர் ஆகிய இடங்களை சுற்றிப்பார்த்து விட்டு சொந்த ஊர் திரும்பியுள்ளனர்.

அந்த பேருந்து குன்னூர் அருகே மரபாலம் என்ற இடத்தில் சென்ற போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி அருகே உள்ள 50 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் 9 பேர் உயிரிழந்த நிலையில் 30 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் உயிரிழந்த 9 பேர் உடல்கள் நேற்று காலை பிரேத பரிசோதனை செய்யப்பட்டு மதியம் 2 மணி அளவில் தனித் தனி ஆம்புலன்ஸ் மூலமாக குன்னூரில் இருந்து கடையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் கடையத்திற்கு வந்து சேர்ந்த அந்த 9 உடல்களுக்கும் உறவினர்கள் மாலை, பூக்கள் வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அந்த உடல்கள் யாவும் வீட்டின் அருகே கொண்டு செல்லப்பட்டு கடையத்தை சுற்றியுள்ள இடுகாட்டில் தகனம் மற்றும் அடக்கம் செய்யப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments