சாயத்துக்குப் பின்னால் அபாயம்! நோயால் இறந்த பிராய்லரை நாட்டுக்கோழி என விற்பனை! தரமான இறைச்சியா என எப்படி பார்த்து வாங்குவது?

0 1765

திருப்பூரில் நோய்வாய்ப்பட்டு இறந்த கோழிகளை செயற்கை நிறமூட்டி நாட்டுக் கோழி என்று கூறி விற்பனை செய்த இரண்டு பெண்களுக்கு உணவு பாதுகாப்புத் துறையினர் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர்.

திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை, ஆய்வாளர் தங்கவேல் தலைமையிலான உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், திருப்பூர் - பெருமாநல்லூர் சாலை, பாண்டியன் நகர் பகுதியில் உள்ள சாலையோர இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது சாலையோரம் இறைச்சி விற்பனை செய்து கொண்டிருந்த கடைகளில் ஆய்வு செய்தனர். ஆய்வில், பண்ணைகளில் நோய்வாய்ப்பட்டு இறந்த பிராய்லர் கோழிகளை வாங்கி வந்து செயற்கை நிறமூட்டி பூசி நாட்டுக்கோழி என விற்பனை செய்தது தெரியவந்தது.

மேலும், விற்பனையில் ஈடுபட்ட பெண்கள் இருவரும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தனலட்சுமி, மலர் என்பதும், இதுபோன்ற விற்பனையில் நீண்ட நாட்களாக ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.

தொடர்ந்து அவர்களை கடுமையாக எச்சரித்து, நோட்டீஸ் வழங்கிய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், விற்பனைக்காக வைத்திருந்த நோய்வாய்ப்பட்டு இறந்து போன 22 கிலோ கோழி இறைச்சியை பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தனர்.

இதனை தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறையினர், தரமான இறைச்சிகளை சோதனை செய்து, எவ்வாறு வாங்குவது என்பது குறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments