பிரதமரின் அழைப்பை ஏற்று நாடு முழுவதும் தூய்மைப் பணி திட்டம்.. மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதலமைச்சர்கள் தூய்மை பணி.. !!

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஸ்வச் பாரத் எனப்படும் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.
தான் தூய்மைப் பணியில் ஈடுபட்ட வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்த பிரதமர்மோடி, உடல்நலத்தை மேம்படுத்தும் வகையில் தூய்மைப் பணித் திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தூய்மை இந்தியா திட்டத்தின் 9 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் குஜராத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தூய்மை பணிகளை மேற்கொண்டார்
காஷ்மீரில் தால் ஏரியில் தூய்மை பணிகளை துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்கா தொடங்கி வைத்தார். ஏராளமான படகுகளில் சென்றவர்கள், ஏரியில் தேங்கியிருந்த குப்பைகளை சேகரித்து அகற்றினர்
டெல்லியில் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் தேங்கியிருந்து குப்பைகளை மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் சுத்தம் செய்தார். இதேபோன்று, மும்பையில் மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தூய்மைப் பணிகளில் ஈடுபட்டார்.
Comments