காவிரி நீர் விட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் பந்த்

0 1565

காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் ஒரு சில வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன.

பெரும்பாலான இடங்களில் இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் இயங்கின. இதை தடுப்பதற்காக கன்னட அமைப்பினர் சாலைகளில் டயர்களை கொளுத்திப் போட்டு தடை ஏற்படுத்த முயன்றனர்.

முழு அடைப்பால் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் அத்திப்பள்ளி வரை மட்டுமே இயக்கப்பட்டன.

தமிழக பேருந்துகள் ஓசூருடன் நிறுத்தப்பட்டன. பயணிகள் போதியளவில் இல்லாததால் பெங்களூரு மெஜஸ்டிக் பேருந்து நிலையம் வெறிச்சோடி இருந்தது.

பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கும் போதிய எண்ணிக்கையில் பயணிகள் வராததால் பெங்களூரு வரும் மற்றும் பெங்களூரில் இருந்து புறப்படும் சுமார் 44 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

வெறிச்சோடி இருந்த விமான நிலையத்தை முற்றுகையிட முயன்ற கர்நாடக ரக்ஷண வேதிகே அமைப்பினர் தூக்கிச்சென்று கைது செய்யப்பட்டன.

பொதுவில் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி முழு அடைப்பு நடந்ததாக கர்நாடகாவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments