விசாரணைக்கு அழைத்து சென்ற நபர் விபத்தில் உயிரிழந்ததால் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

0 1532

காஞ்சிபுரம் அருகே மதுபானம் வாங்கி சென்ற நபரை கலால் துறையினர் கைது செய்து பைக்கில் அழைத்து சென்றபோது பேருந்து மோதிய விபத்தில் பலியானார்.

குண்டுகுளம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவர் கீழ்க்கதிப்பூரில் உள்ள அரசு மதுபான கடையில் 30 மதுபான பாட்டில்களை வாங்கி சென்றதாக கூறப்படுகிறது.

அவரை காஞ்சிபுரம் கலால் பிரிவு காவலர்கள் மடக்கி பிடித்து கைது செய்து அவரிடமிருந்து மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் சீனிவாசனை கலால் துறையினர் பைக்கில் அமர வைத்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த பொழுது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, சீனிவாசன் பைக்கில் இருந்து இறங்கி தப்பி  ஓட முயன்றதாக கூறப்படுகிறது.

அப்போது எதிர்பாராத விதமாக அந்த வழியாக வந்த தனியார் பேருந்து சீனிவாசன் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

சீனிவாசனின் இறப்புக்கு கலால் காவல் துறையினர்தான் காரணம் எனக் கூறி இறப்புக்கு நிவாரணம் மற்றும்  நீதி விசாரணைக் கோரி  அவரது சடலத்தை வாங்க மறுத்து மருத்துவமனை அருகே அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments