இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் பண மோசடியில் ஈடுபட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

0 2686

இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் முன்பணமாக பெற்ற பணத்தை திருப்பி தரவில்லை என அறுவை சிகிச்சை நிபுணர்களின் தேசிய சங்கத்தின் சார்பில் மருத்துவர் விநாயக் செந்தில் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அதில், 2018ஆம் ஆண்டு இசை நிகழ்ச்சிக்காக ஏ.ஆர். ரகுமானுக்கு 29 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை முன்பணமாக கொடுத்ததாகவும், நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்ட நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக பணத்தை திருப்பி தராமல் இழுத்தடித்து வருவதாக கூறியுள்ளார்.

இந்த புகாரை மறுத்துள்ள ஏஆர் ரகுமானின் செயலாளர் செந்தில் வேலன், நிகழ்ச்சியை ரத்து செய்தால் முன் தொகை திருப்பித் தரப்படாது என்று ஒப்பந்தத்திலேயே இருப்பதாகவும், ஜிஎஸ்டிக்காக பெற்ற தொகையை தாங்கள் திருப்பி தந்துவிட்டதாகவும் விளக்கம் அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments