வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 400 இடங்களுக்கும் மேல் நிச்சயம் வெல்லும்.. பிரதமர் மோடி 3வது முறையாக பிரதமர் ஆவார் - அண்ணாமலை

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 400 இடங்களுக்கும் மேல் வென்று பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக அமருவார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கோவையில் என் மண்,என் மக்கள் நடைபயணத்தின் நிகழ்ச்சியில் பேசிய அவர், 2014ஆம் ஆண்டு உலக அளவில் 11வது இடத்தில் இருந்த இந்தியாவின் பொருளாதாரத்தை கடந்த 9 ஆண்டுகளில் 5 வது இடத்திற்கு பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார் என்றார்.
நடிகர் கமலஹாசன் திறமையான நடிகர் என்றும் ஆனால் தற்போது திமுகவில் சேருவதா அல்லது காங்கிரசில் சேருவதா என்ற குழப்பத்தில் இருந்து வருவதாக அண்ணாமலை தெரிவித்தார்.
சனாதன தர்மம் என்றால் என்ன என்று தெரியாமலேயே உதயநிதி ஸ்டாலின் பேசி வருவதாக அண்ணாமலை தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் வெற்றியை தடுக்கு பொய் பிரச்சாரங்கள் அவிழ்த்து விடப்படும் என்றும் அதனை நாம் முறியடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
Comments