கொசோவாவில் செர்பியர்கள் தாக்குதலில் அதிகாரி உள்ளிட்ட 3 பேர் பலி..!

0 1645

கொசோவாவில் மடாலயம் ஒன்றுக்கு, நம்பர் பிளேட் இல்லாத கனரக வாகனங்களில் வந்த 30-க்கும் மேற்பட்ட செர்பியர்கள், கும்பல் தாக்குதல் நடத்தியதில் ஒரு அதிகாரி மற்றும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

மத்திய ஐரோப்பிய நாடான செர்பியாவில், அல்பேனியர்கள் அதிகம் வசித்துவரும் பகுதியான கொசோவோ கடந்த 2008-ஆம் ஆண்டு தன்னை தனி நாடாக அறிவித்துக்கொண்டது.

இதனால் அங்கு சிறுபான்மையினராக மாறிய செர்பியர்களுக்கும், பெரும்பான்மையாக உள்ள அல்பேனியர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் வெடித்து உயிரிழப்புகளும் நேர்ந்துவருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments