எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடக்கிறது அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்..!

0 1876

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று பிற்பகல், கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடக்க உள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடக்க உள்ள இந்தக் கூட்டத்தில், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

தமிழக பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் இடையேயான கருத்து மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவை, கடந்த இரு தினங்களுக்கு முன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சந்தித்துப் பேசினர்.

இந்த நிலையில் இன்று நடக்க உள்ள அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கூட்டணி நிலைப்பாடு குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments