சர்வதேச வழக்கறிஞர்களின் மாநாட்டை தொடங்கிவைத்தார் -பிரதமர் மோடி

0 795

டெல்லி விஞ்ஞான் பவனில் சர்வதேச வழக்கறிஞர்களின் 2 நாள் மாநாட்டை தொடங்கிவைத்து பேசிய பிரதமர் மோடி, இந்தியா மீது உலக நாடுகள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு இங்குள்ள சுதந்திரமான நீதித்துறை முக்கிய காரணம் என்று கூறினார்.

இந்தியாவின் நீதி அமைப்பின் பாதுகாவலர்களாக நீதித்துறையும், வழக்கறிஞர் சங்கங்களும் இருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.

மக்களின் பிரச்சனைகளுக்கு விரைவாக தீர்ப்பளிப்பதில் லோக் அதாலத் நீதிமன்றங்கள் முக்கிய பங்கு வகிப்பதாகக் கூறினார்.

தீவிரவாதம், சைபர் தாக்குதல், பணமோசடி, செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாடு உள்ளிட்டவற்றை எதிர்கொள்ள உலகளாவிய கட்டமைப்பு அவசியம் எனக் குறிப்பிட்ட பிரதமர், இதற்கு பல்வேறு நாடுகளின் சட்ட கட்டமைப்புகள் ஒன்றிணைய வேண்டும் என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments