மன்மத காக்கியால் உயிரை மாய்த்த பெண் காவலர்..!

0 2816

மதுரை அருகே பெண் காவலர் தனது 2 குழந்தைகளுடன் தற்கொலை செய்துக் கொண்ட வழக்கில் விசாரணைக்குப் பயந்து ரயில்வே காவலர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். தகாத உறவினால் 4 உயிர்கள் பறிபோனதை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

மதுரை திருப்பாலை பகுதியை சேர்ந்த சுப்புராஜின் மனைவியான ரயில்வே காவலர் ஜெயலட்சுமி தனது 11 வயது பெண் குழந்தை, 9 வயது மகனுடன் தேனூர் பகுதியில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டார். மதுரையில் பணியாற்றி வந்தவரை திருச்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டதால் மன உளைச்சலில் ஜெயலட்சுமி தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்பட்டது. தற்கொலைக்கு காரணம் திருமணம் கடந்த உறவு என போலீஸார் தெரிவித்தனர்.

மதுரை ரயில்வே காவல் நிலையத்தில் பணியாற்றிய ஜெயலட்சுமிக்கும், அங்கு பணியாற்றிய தலைமை காவலரான சொக்கலிங்க பாண்டியனுக்கும் 6 வருடம் திருமணம் கடந்த காதல் இருந்து வந்த நிலையில் 2021ம் ஆண்டில் சொக்கலிங்க பாண்டியன் செங்கோட்டைக்கு மாற்றப்பட்டார். அங்கு சென்ற சில மாதங்களில் ஜெயலட்சுமியை சந்திப்பதை நிறுத்திக் கொண்டதாக கூறப்படுகின்றது. அங்கு சென்று விசாரித்த போது , சொக்கலிங்கம் அங்கு வேறு இரு பெண்களுடன் நெருக்கமாக பழகி வந்தது தெரிய வரவே, அந்த பெண்களிடம் செல்போனில் மல்லுக்கு நின்றுள்ளார் ஜெயலட்சுமி

சம்பவத்தன்று ஜெயலட்சுமிக்கும், வீட்டுக்கு வந்த சொக்கலிங்க பாண்டியனுக்கும் கைகலப்பு ஏற்பட்டதாகவும், அக்கம் பக்கத்தினர் வந்து சமாதானப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. தனது திருமணம் கடந்த உறவு ஊராருக்கே தெரிந்து விட்ட அவமானத்தால் ஜெயலட்சுமி தனது குழந்தைகளுடன் தற்கொலை செய்துக் கொண்டதாக தெரிவித்த போலீஸார், அது தொடர்பான ஆடியோகளை வெளியிட்டனர்

இதற்கிடையே போலீஸ் விசாரணைக்கு பயந்து, சொக்கலிங்க பாண்டியன், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தனது காரை நிறுத்தி, தனது அண்ணனுக்கு வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பி விட்டு, தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்துக்கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments