இந்திய விமானப்படைக்கு 6 கண்காணிப்பு விமானங்களை வாங்கத் திட்டம்

0 1144

இந்திய விமானப்படைக்கு 6 கண்காணிப்பு விமானங்களை வாங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

பிரேசில் நாட்டின் Embraer ERJ-145 மாடல் விமானங்களை வாங்கி அவற்றில் ரேடார்கள் உள்ளிட்டவைகளைப் பொருத்தும் பணிகளை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ மேற்கொள்கிறது.

6 புதிய விமானங்களை கொள்முதல் செய்வதற்கான பணிகள் தொடங்கி விட்டதாக விமானப்படையின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வான்பரப்பில் ஒரு கண்காணிப்பு தளத்தை இந்த விமானங்கள் அமைத்துத் தரும் என்றும் கருதப்படுகிறது.அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் இந்தியாவுக்கு இதுபோன்ற 13 புதிய விமானங்கள் கிடைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments