அமெரிக்காவில் வீட்டில் கணவன், மனைவி, 2 குழந்தைகள் மற்றும் 3 நாய்கள் சுட்டுக்கொலை
அமெரிக்காவின் சிகாகோ அருகே ரோமியோவில்லி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கணவன், மனைவி, 2 குழந்தைகள் மற்றும் அவர்களது 3 நாய்கள் சுட்டுக்கொல்லப்பட்டன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ரோமியோவில்லி போலீசாரால் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
உயிரிழந்த குடும்பத்தினரை தொலைபேசியில் பலமுறை தொடர்புகொள்ள முயன்றும் முடியாததால், உறவினர் ஒருவர் கேட்டுக்கொண்டதன் பேரில், வீட்டிற்கு சென்று போலீசார் சோதனை நடத்தியபோது கொலை சம்பவம் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இது தற்கொலை போல தெரியவில்லை எனக் கூறியுள்ள போலீசார், செல்லப் பிராணிகளோடு சேர்த்து குடும்பமே படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருவதாக கூறியுள்ளனர்.
Comments