கையில் மாலை கெடச்சா யாருக்கு வேணா போடுவியா.. மன்னிப்பு கேளு கூல் சுரேஷ்...!

0 4522

நடிகர் மன்சூரலிகானின் பட விழா மேடையில் வைத்து, நிகழ்ச்சி தொகுப்பாளினிக்கு, கூல் சுரேஷ் திடீர் என்று மாலையிட்ட சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் மேடையில் மன்னிப்பு கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டார் 

நல்லா வச்சான்யா படத்துக்கு பேரு... சரக்குன்னு... அதான் சரக்கடிச்சவன் போல இப்படி ஒரு சம்பவத்தை கூல் சுரேஷ் மேடையிலேயே செஞ்சிருக்கான் என்று அவரை செய்தியாளர்கள் வறுத்தெடுத்த சம்பவத்தின் நேரடி காட்சிகள் தான் இவை..!

மன்சூரலிகான் தயாரித்து நடிக்கும் சரக்கு படத்தின் அறிமுக விழாவில் பேசிய நடிகர் கூல் சுரேஷ், மாலை ஒன்றை எடுத்து அருகில் நின்ற நிகழ்ச்சி தொகுப்பாளினி கழுத்தில் வலுக்கட்டாயமாக போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

கூல் சுரேஷின் இந்த செயலுக்கு அங்கிருந்த செய்தியாளர்கள் கடுமையாக கண்டித்தனர். இதையடுத்து மேடையில் இருந்த மன்சூரலிகான் எழுந்து வந்து அந்த பெண்ணிடம் கூல் சுரேஷை மன்னிப்பு கேட்க வைத்தார்

விளம்பர விரும்பியாக சுற்றித்திறியும் கூல்சுரேஷின் இந்த அடாவடி செயல் குறித்து சம்பந்தப்பட்ட பெண் தொகுப்பாளினி காவல் நிலையத்தில் புகார் அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தன்மீது புகார் தெரிவித்து விடுவாரோ என்ற பயம் ஏற்படவும், மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ள கூல் சுரேஷ், தான் செய்த தவறுக்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments