நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் - கர்நாடக எம்.பி.க்கள் முடிவு

0 1566

தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிட பிறப்பித்த உத்தரவை எதிர்த்து டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த கர்நாடக அனைத்துக் கட்சி எம்.பி.க்களும் முடிவு செய்துள்ளனர்.

அத்துடன், பிரதமர் மோடியைச் சந்தித்து முறையிடவும்  திட்டமிட்டுள்ளனர். காவிரி விவகாரம் தொடர்பாக, கர்நாடக மாநில எம்.பி.க்கள், கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் பிரஹலாத் ஜோஷி, ராஜீவ் சந்திரசேகர், ஷோபா, பகவந்த் கூபா, நாராயணசாமி, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் மற்றும் அனைத்துக் கட்சி மூத்த தலைவர்களுடன் கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று டெல்லியில் ஆலோசனை நடத்தினார்.

இக்கூட்டத்தில் துணை முதல்வர் டி.கே. சிவக்குமாரும் கலந்துகொண்டார். கூட்டத்தின் முடிவில், மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து ஆலோசனை நடத்தவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments